பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன_ஒரு_சமுதாயப_பாவை-அ.-சினிவாசன் 560 இராமன் பக்கத்தை விழிப்போடு இருக்கச் செய்கிறான் என்பது பற்றியும் கம்பன் மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். இராம-இராவணப் போர் தொடங்கிய அதைத் தர்மமும்-பாவமும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு(போர் செய்யத் தொடங்கின என்று கம்பன் மிக நயமாகக் கூறுகிறார். “கருமமும் கடைக்கண் உறு ஞானமும் அருமை சேரும் அவிஞ்ஞையும் விஞ்ஞையும் பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத் தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினர்.” கருமத்திற்கும் ஞானத்திற்குமிடையில் அறியாமைக்கும் அறிவுக்குமிடையில் பாவத்திற்கும் தருமத்திற்கும் இடையில் போர் தொடங்கி நடப்பதாக இராவணனுக்கும் இராமனுக்கும் இடையில் நடக்கும் போரைப்பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். இராவணனுக்கும் இராமனுக்கும் போர் தொடர்ந்தது. இராவணன் விடுத்த கணைகளையெல்லாம் இராமன் தடுத்துத் தவிடு பொடியாக்கினான். இராவணன் மாயக்கணையை இராமன் மீது ஏவினான். அதை இராமன் ஞானக் கணையால் தடுத்து மாய்த்தான். இராவணன் தனது வல்லமை மிக்க சூலப்படையை இராமன் மீது ஏவினான். அந்த சூலப்படை இராமனுடைய மார்பில் பட்டுப் பொடிப்பொடியாக நொருங்கியது. அதைக் கண்டு இராவணன் ஆச்சரியமடைந்து தனக்குள் எண்ணுகிறான் இவன் யார்? “சிவனோ அல்லன், நான்முகன் அல்லன் திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான் தவனோ என்னில் செய்து முடிக்கும்தரன் அல்லன் இவனோதான் அவ்வேதமுதற் காரணன்?” என்றான். தன்னுடைய வல்லமை மிக்க கணைகளையும் படைகளையும் முறியடிக்கும் அளவுக்குத்திறன் படைத்த இவன் யார்? என்று இராவணன் எண்ணுகிறான்.