பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கம்பனும் மானுடமும். கம்பன் தனது இராமாயணப் பெருங் காவியம் முழுவதிலும் மானுடர், மானுடம், மனிதர் என்னும் சொற்களை மிகவும் அதிகமான அளவில் பல இடங்களிலும் பயன் படுத்தியுள்ளார். கடவுளேயானாலும் மனித வடிவிலே வந்துதான் தனது அரிய செயல்களைச் செய்து முடிக்கிறார் என்னும் கருத்தும், அரிய செயல்களைச் செய்து முடிக்கும் பெரியோர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படும் கருத்தும் பாரத நாட்டின் சீரிய சிந்தனையாளர்களிடம் பரவலாகவும் பிரபலமாகவும் காணப்படுகிறது. “செற்கரிய செய்வார் பெரியர்” என்பது வள்ளுவர் வாசகமாகும். கடவுள் மனிதனாக அவதரித்துப் பல அரிய செயல்களைச் செய்வதாகவே வைணவ சம்பிரதாய நம்பிக்கை வெளிப்படுத்துகிறது. பகவத் கீதையின் மய்யமான கருத்தும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. “யான் பிறப்பற்றவ னெனினும் அழிவற்றவ னெனினும் உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும் யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று ஆத்ம மாயையால் பிறப் பெய்துகிறேன்.” “பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.” “நல்லோரைக்காக்கவும் தீயன செய்வோ ரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நாம் யுகந்தோறும் பிறக்கிறேன்.” பகவத் கீதையின் இந்த சுலோகங்களில் எனக்குப் பிறப்பில்லை, ஆயினும் ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன். தர்மம் அழிந்து