பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. *bugolo tongol-QPub: 105 “வன்மை தரித்தோர் மானிடர் மற்றங்கு அவர் வாளால் நின் மருகிக்கும் நாசியிழக்கும் நிலை நேர்ந்தார் என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஒர் புன்மை தெரிப்பின் வேறினி எற்றே புகல் வேலோய்” என்று கூறி மானிடரைப் பழி வாங்க வேண்டும் என்று மாரீசனிடம் கூறுகிறான் இராவணன். இங்கும் இராமனை மானிடன் என்று குறிப்பிட்டு அவனால் நமக்கும் நமது மரபுக்கும் அவமானம் ஏற்பட்டு விட்டது என்று தன்மானவுணர்வையும் துண்டிவிட்டு, அந்த மானிடரைப் பழிவாங்க மாரீசன் துணை புரிய வேண்டும் என்றும் தன் மாமனை வேண்டுவதைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். மாரீசன் இராமனுடைய பலத்தை, சக்தியை எத்தனையெடுத்துக் கூறியும் கேட்காமல் இராவணன் தன் மாமன் மாரீசனை மாய வேலை செய்யும் படி வற்புறுத்துகிறான். வேறுவழியின்றி மாரீசன் மாய மான் பணியை நிறைவேற்றி மடிகிறான். இராவணன் துறவி வேடம் பூண்டு சீதையிடம் வருகிறான். துறவி வாயால் இராவணனைப் புகழ்ந்து பேச, சீதை அதை மறுத்து “அரக்கர் தம் வருக்கத்தையே இராமன் அழிப்பார்” என்று கூற, “மானிடர் அரக்கர் தம்மை வேர் அற வெல்வர் என்னின் யானையின் இனத்தை யெல்லாம் இளமுயல் கொல்லும்” என்னும் “கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும்” என்றும் “மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான்” என்றும் “மண்ணிடைப்புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் பெண் எனப் பிழைத்தாய்” என்றும் சீதையிடம் சினந்து கூறி அவளைத் துக்கிக் கொண்டு போகிறான் அரக்கன் என்று கம்பன் குறிப்பிடுகிறார். சீதையை வான வழியில் தூக்கிச் செல்லும் போது சீதை கோபத்துடன் கூறுவதும் இராவணன் பதில் கூறுவதுமான சொற்களில் மானுடர் என்னும் வார்த்தையும் வருவதைக் காணலாம். "மீட்டும் ஒன்று உரை செய்வாள் தி விர னேல் விரைவில் மறுன்