பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் |32 ஆவற்கண் நீ உழந்த அருந்தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற காவற்கும் வலியான ஒர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ?” என்றெல்லாம் பலவாறு புலம்பி மண்டோதரி தனது கணவனுடைய உடலைக் கட்டித் தழுவிக்கொண்டே உயிர் நீங்கினாள். இத்தனை வல்லமையும் மிக்க இராவணன் ஒரு மானுடன் கையால் மாண்டான் என்னும் சொற்கள் மண்டோதரியின் புலம்பல் பாக்களிலும் காண்கிறோம். அதுவும் கம்பனுடைய கவிதைகளின் சிறப்பாகும். இராவணன் போர்க்களத்தில் இறந்து பட்டவுடள் வீடணனும், மண்டோதரியும் இராவணனுடைய இதர மனைவிமாரும் புரண்டு அழுத காட்சி கம்பனது காவியத்தில் இலக்கியச் சிறப்பும் காவியச் சிறப்பும், கவிதைச் சிறப்பும் மிக்க அவலக் காட்சியாக அமைந்துள்ளது. முக்கோடி வாழ் நாட்கள், முயன்றுடைய பெருந்தவம், எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரம், திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலி, போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்வீரன், அசுரர்கள் தம்பிரளயம், அமரர் கூற்று, வெள்ளெருக்கம் சடை முடியான், வெற்பு எடுத்தத் திருமேனி, தேவர்க்கும் திசைக்கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செங்கண் மாற்கும்-ஏவர்க்கும் வலியான், என்று புகழ் மிக்க வல்லவன், அந்த வல்லவனுக்தி ஒரு வல்லவன் அவன் ஒரு மானிடன். வேறுள குழுவயெல்லாம் மானுடம் வென்றதென்று கம்பன் என்றோரு மானிடன் கூறியது சிறப்பு மிக்க சீரிய சொற்களாகும். பெரும்பலம் மிக்க தாடகை முதல் இராவணன் வரை இடையிலுள்ள அரக்கர்கள் அனைவரையும் அழித்து வெற்றிக் கொண்டதும், சக்திமிக்க சிவதனுசை எடுத்து வளைத்து முறித்ததும், பரசுராமனின் விஷ்ணு தனுசைக் கையிலெடுத்தும் அப்பிராமணனின் தவவலிமையை வாங்கியதும்,