பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் 185 அன்பில்லாமல் உன்னை வனத்திற்கு அனுப்பினால் நான் அதைப் பொருத்துக் கொண்டு என் உயிரை வைத்துக் கொண்டிருப்பேனா”? என்றும் கேட்கிறான். இதைக் கூறும் போது ஏன்-கண் முன்னாலேயே, மூத்தவன் என்னும் முறையில் க்கு அரசைக் கொடுத்து விட்டுப் பின்னர் தக்க7 காரணம் இல்லாமல் இல்லையென்று கூறிய தசரத மன்னன் போல் நான் இந்த உடம்பிலுள்ள உயிரை வைத்துக் கொண்டிருப்பேனா ? என்று தசரத மன்னனை நிந்தனை செய்தும் பழி துாற்றியும் இலக்குவன் பேசுகிறான். அதைக் கம்பன் கவிதை மிக அழகாகக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுக் கூறுகிறது. “நின்கண் பரிவில்லவர் நீள் வனத்து உன்னை நீக்கப் புன்கண் பொறியாக்கை பொறுத்துயிர் போற்று கேனோ ! என் கண் புலம் முன் உனக்கு ஈந்து, பின் இல்லையென்ற வன்கண் புலம் தாங்கிய மன்னவன் போல”, என்றான். இராமனுக்கு இருவகையில் அநியாயம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்று நாடு கொடுப்பதாகக் கூறி அதை மறுத்தது. இரண்டாவதாக, கொடுமையாகக் காடாளச் சொன்னது. முன்னதைக் காட்டிலும் பின்னதைப் பற்றி மிக அதிகக் கொடுமையானதெனப் பேசப்பட்டுள்ளது. தசரதன் வாயாலும், கோசலை வாயாலும் கூட அது கூறப்பட்டுள்ளது. இலக்குவனும் முதலில் முடி சூட்டல் மறுக்கப்பட்டதைப் பற்றிச் சீறினான். பின்னர் வனம் செல்லச் சொன்னது பற்றிக் கடுமையாகச் சீறுகிறான். தசரத மன்னனையே சாடுகிறான். இவ்வாறு தசரத மன்னன் மீது குறை கூறி நிந்தனை செய்து பழி தூற்றிப் பேசிய இலக்குவனிடம் மிகவும் பொறுமையுடனும் அடக்கத்துடனும், “மன்னன் மீது குற்றம் இருப்பதாக எனக்குப் படவில்லை. அவ்வாறு நான் கருதவில்லை. முடிகொள் என்று கூறிய போது அதை ஏற்றுக்கொண்டது என் குற்றமேயல்லாமல் அதில் மன்னவன் குற்றம் எங்கே இருக்கிறது” என்று இராமன் கூறுகிறான். இது மிகவும் பொருள் பொதிந்த கருத்தாகும். இலக்குவன் மன்னன் மீது சுமத்திய பழியை மறுத்து இராமன் அப்பழியைத்தன் மீது போட்டுக் கொள்கிறான். இது இராமனுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. அத்துடன் இலக்குவனின் சினத்தைத் தணிப்பதும் அவனுடைய கடமையாகிறது.