பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 200 == இவ்வாறு இளவல் ஆறுதல் தறிய போது, இராமனும் அயர்வு நீங்கிச் செய்ய வேண்டிய தர ங்களைச் செவ்வையாகச் செய்து முடிப்போம் என்று' தனது துயரத்தைக் குறைத்துக் கொண்டான். “அவ்வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி அவ்வழி இணைய எண்ணின் ஏழைமைப்பாலது என்னா வெவ்வழி பொழியும் கண்ணிர் விலக்கினன் விளிந்த தாதை செவ்வழி உரிமையாவும் திருத்துவம் சிறுவ என்றான்.” என்று இராமன் சோர்வு நீங்கித் தெளிவடைந்து |கூறுவதைக கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறு இராமனும் இலக்குவனும் கழ்ச்சிகளையும் கண்டு, பல இடங்களையும் கடந்து பம்பைப் பொய்கையை அடைந்தனர். இராமன் துக்கத்தால் அடிக்கடி கலங்கினான். சாதாரண மனிதனைப் போல் அடிக்கடி புலம்பினான். கண் கலங்கினான். கவலை கொண்டான். அப்போது அவனுக்கிருந்த ஒரே துணை இலக்குவன் தான். துக்கத்தால் வருந்தும் இராமனுக்கு இலக்குவன் ஆறுதல் கூறிக் கொண்டே வருகிறான். பம்பைப் பொய்கைக் கரைக்கு வந்த போது, பொழுது சாய்ந்து விட்டது. அவ்வேளையில் இராமனின் கலக்கம் மேலும் அதிகமாயிற்று. இலக்குவன் திடமாக இருந்து அண்ணனைத் தேற்றுகிறான். அப்போது இலக்குவன் அண்ணனுக்கு அன்புத் தம்பியாகவும் அருந் துணையாகவும் நின்று அண்ணனை அழைத்துச் செல்கிறான். அதைக் கம்பன் தனது தனிச் சிறப்பான கவிதையில் கூறுகிறார், “ஆண்டு அவ்வள்ளலை அன்பெனும் ஆர் அணி பூண்டதம்பி பொழுது கழிந்ததால் ஈண்டு இரும்புனல் தோய்ந்து உன் இசையென நீண்டவன் கழல் தாழ்நெடி யோய் என்றான்” என்று கூறுகிறான். இலக்குவனை அன்பெனும் ஆர் அணிபூண்ட