பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன-ஒரு சமுதாயப_பார்வை-அ. சீனிவாசன் 227 வலிய அழைத்துப் போர் செய், நான் தனித்து நின்று வாலி மேல் கனையை ஏவிக் கொல்வேன்” என்று கூற் சுக்கிரீவன் வாலியைப் போருக்கழைத்தான். 量 வாலி சுக்கிரீவனுக்குத் தன் தம்பி என்றும் பாராமல் தீங்கிழைத்தான். அடித்துத்துரத்தினான். தாரத்தை அபகரித்துக் கொண்டான். இராமன் சுக்கிரீவனுக்கு அபயமளித்து அண்ணனுக்கு எதிராகப் போரிடச் செய்து அவ்வண்ணனைக் கொல்வதற்கு வழி காட்டுகிறான். இதில் ஒரு சிறு முடிச்சு இருக்கிறது. அது கதைப் போக்கிற்கு அவசியமான முடிச்சாகும். ஆயினும் அதில் ஒரு முரண்பாடு இருப்பதாகச் சிலர் வாதிடுவர். சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைக்கிறான். வாலி கோபத்துடன் போருக்கு எழுகிறான். அப்போது வாலியின் மனைவி தாரை தன் கணவனைத் தடுக்கிறாள். வாலி அதைப் பொருட் படுத்தவில்லை. அப்போது தாரை “சுக்கிரீவனுக்கு ஒரு பலமான துணை கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் இப்படி வலுச்சண்டைக்கு வரமாட்டான்” என்று கூறுகிறாள். அப்படி வலுவுள்ள ஒருவன் வந்தாலும் அவனுடைய பாதி பலம் எனக்கு வந்துவிடும். எனவே என்னை ஒன்றும் செய்து விட முடியாது, நீ கவலைப் படாதே என்று தாரைக்குப் பதில் கூறுகிறான். இராமாயணக் கதையில் தாரை ஒரு அதி புத்திசாலிப்பெண். மிகுந்த இது அறிவு கொண்டவள். தனது கணவன் தனக்கு அதிகமான பலம் உள்ளது என்னும் அசட்டு தைரியத்தால் எதற்கும் அவசரப்பட்டு ஒரு காரியத்தில் இரங்கி விடுவான் என்பதை அறிந்தவள். சுக்கிரீவன் போருக்கு அழைக்கிறான் என்று கேள்விப் பட்டவுடனேயே அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்பது மட்டுமல்லாமல் இராமன் வந்துள்ளான் என்னும் செய்தியையும் அறிந்திருந்தாள். இந்த விவரங்களை வாலியிடம் சொல்லும்போது மிகவும் நிதானமாகவும் ஜாக்கிரதையாகவும் எடுத்துக் கூறுகிறாள். முதலில் சுக்கிரீவனுக்கு ஒரு வலுவான துணை கிடைத்திருக்க வேண்டுமென்று கூறுகிறாள். அடுத்தப் படியாக இராமன் என்று ஒருவன் வந்திருப்பதாகத் தயக்கத்துடன் கூறுகிறாள். அச்செய்தியைப் பக்குவமாக “சுக் கிரீவனுக்கு இராமன் என்பவனுடைய நட்பு அமைந்து உன்னைக் கொல்வதற்கு