பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зяйцей — гдѣ заретили штого, — ее залпылаей 229 வாலியும் சுக்கிரீவனும் இரு திசை யானைகளைப் போல மோதினர். வாலி சுக்கிரீவனைச் சரியாக வலுவாக அடித்து விட்டான். இராமனிடமிருந்து கணை வரவில்லை. சுக்கிரீவன் அடி தாங்க முடியாமல் பயந்து திரும்பவும் இராமனிடம் ஒடி வந்து விட்டான். இராமன் இரு வரும் ஒரே மாதிரியாக இருந்ததால் அவர்களுக்கிடையிலுள்ள வேறுபாடு தெரியாமல் அம்பு எய்ய முடியவில்லை” என்று கூற அடுத்த ஏற்பாட்டின் படி மீண்டும் சுக்கிரீவன் கழுத்திலும் இடுப்பிலும் கைகளிலும் மலர் மாலைகளை அணிந்து கொண்டு அடையாளத்துடன் போருக்குப் புறப்பட்டான். இருவரும் கடும் போர் செய்ய இராமன் வாலி மீது கணை தொடுத்து விட்டான். இராமனுடைய கணை மார்பில் பட்டவுடன் வாலி, ஊழிக் காலப் பெருங்காற்றில் மேரு மலை வீழ்ந்தது போல வீழ்ந்தான். இடிவிழும் போது மலை சாய்ந்தது போல சாய்ந்தான். சுக்கிரீவனைப் பற்றியிருந்த வாலியின் கைகள் நழுவி விட்டன. மார்பில் பாய்ந்திருந்த கணையை, உள்ளே போக விடாமல் அதைக் கையால் பற்றிப் பிடித்துக் கொண்டு கணை யாருடையது என்று காண முற்பட்டான். அவனுடைய மலை போன்ற மார்பிலிருந்து இரத்தம் கொப்பளித்துப் பெருக்கெடுத்து வெளியே வந்தது. அதைக் கண்ட சுக்கிரீவனுக்கும் சகோதர பாசத்தால் தன்னையறியாமல் கண் கலங்கி அன்பை வெளிப்படுத்தும் கண்ணிரைச் சொரிந்தான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். "வாசத்தாரவன் மார்பெனும் மலை வழங்கு அருவி ஒசைச் சோரியை நோக்கினன் உடன் பிறப்பென்னும் பாசத்தால் பிணிப் புண்ட அத்தம்பியும் பசுங்கண் நேசத்தாரைகள் சொரி தர நெடுகிலும் சேர்ந்தான்” என்று கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. வாலி வதம் இராமாயண இதிகாசக் கதையில் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அதிகமான அளவில் பேசப் படுவதும் விவாதிக்கப் படுவதுமான ஒரு நிகழ்ச்சியாகும். அரசியல் தன்மையும் அணி சேர்க்கை வியூகத் தன்மையும் கொண்டதாகும். அதன் விவரங்களைப் பின்னர் காண்போம். இங்கு சகோதரர்கள்