பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшейт –“РФ ~Qрғышли шттегови — 07:49, 2 மார்ச் 2016 (UTC)болғай! 289 இலங்கை வரையிலுமான சகோதரத்வத்தையும் ஒற்றுமையையும் பாரதத்தின் ஒருமைப்பாட்டையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. இராமன் அயோத்தியை விட்டு காடு செல்லும் போது வெறும் தாழ் இரு சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெம்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி நாடு திரும்புவதற்காக மட்டும் செல்லவில்லை. அன்பும் அரவணைப்பும் ஆயுதமும் படையும் தாங்கி பாரதத்தின் தென்கோடிவரை சென்று தன் அவதார நோக்கத்தின் லட்சியப் பயணத்தை மேற் கொண்டான். அந்த மகத்தான காலப் பயணத்தில் நல்லவர்களை நண்பர்களாக்கி, நண்பர்களை சகோதரர்களாக்கி, தீயோரை நீக்கி, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும், நாட்டு மக்களின் அவதாரப் பெருமையைக் கூறும் மகத்தான காவியமாக இராமாவதாரக் காவியத்தைக் கம்பன் நமக்கு வடித்துக் காட்டியுள்ளார். கம்பன் தனது இராம காவியத்தில் பாரதத்திற்குட்பட்ட பல நாடுகளையும் மொழிகளையும் பல பிரிவு மக்களையும் காட்டுகிறான். அவர்கள் அனைவரும் பாரத மாதாவின் புத்திரர்கள் என்னும் முறையில் சகோதரர்கள் என்னும் மகத்தான தத்துவத்தை இராமபிரான் காட்டும் சகோதரத்வக் காட்சி மூலம் நமக்கு உணர்த்துகிறார். அதன் வழியில் பாரதத்தின் பெருமையும் பண்பாடும் பல இடையூறுகளையும் தடைகளையும் தாண்டித் தொடர்ந்து முன் சென்று கொண்டிருக்கிறது. -—, っ