பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. •ыhuspith sɔIJésugpun 299 பெருகட்டும் என்று பறை சாட்ட மன்னன் தசரதன் உத்தரவிட்டான் என்று கம்பன் தனது கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார். மக்கட் பேறு ஏற்பட்ட மகிழ்ச்சியில் மன்னன் இவ்வாறு அறிவித்திருந்தாலும், வரிகள் நீங்க வேண்டும், போர்கள் ஒழிய வேண்டும் என்னும் கருத்துக்கள் தோன்றியுள்ளது மிகவும் கவனிக்க வேண்டியவையாகும். இவை அன்றைய நாட்டு மக்களுடைய உணர்வு நிலையைப் பிரதி பலிப்பதாகக் கருதலாம். அரசனுக்கு எடுத்துக் கூறவும், இடித்துக் கூறவும், தக்க அமைச்சர்கள், ஆலோசனையாளர்கள், மூத்தோர், பெரியோர், அறிஞர் பலரும் இருக்க வேண்டிய அவசியத்தைக் கம்பன் பல இடங்களிலும் நன்கு குறிப்பிட்டு எடுத்துக் கூறுகிறார். வள்ளுவன் அரசு அமைப்பு பற்றிக் கூறும் இலக்கணங்களுக்கேற்றவாறு கம்பன் தனது கதையில் பாத்திரங்களைப் படைத்துக் காட்டியுள்ளதாகப் பல தமிழ்ப் புலவர்களும் கூறுகிறார்கள். அரசனுக்கு வேண்டிய அருங் குணங்கள் பற்றியும் அமைச்சர்களுக்கு வேண்டிய அறிவுத் தெளிவு பற்றியும் கம்பன் மிகச் சிறப்பாகக் கூறுகிறார். தசரதனைப் பற்றிக் கூறும் போது, அடாநெறி அறைதல் செல்லா, அருமறை அறைந்த நீதி, /விடாநெறி புலமைச் செங் கோல், வெண்குடை வேந்தர் வேந்தன்” என்று குறிப்பிடுகிறார். "தசரதன் தீய ஒழுக்கங்களைக் கூறாத, அவை செல்ல முடியாத அருமறைகள் தெளிவு படக் கூறும் நீதி தவறாத ஒழுக்கத்தையும் அறிவையும், செங்கோலையும் வெண் குடையையும் கொண்ட வேந்தர் வேந்தன் என்று கம்பர் குறிப்பிடுகிறார். இன்னும் அரசனுடைய திறனைப் பற்றியும் அமைச்சனுக்கு இருக்க வேண்டிய திறன் பற்றியும் கம்பன், ‘நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும், சோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சி போல”என்றும்'கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப் பதங் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன், பன்னுால் விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் இதங்கள் கொள்கிலா மன்னனை ஒத்தது ஒர் யானை” என்றும் குறிப்பிடுகிறார்.