பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-கம்பநாடரும்-இராமாவதாரக் காவியமும் 32 தொடங்குகின்றன. இவைகள் அசைந்து மேலும் அதிக பசுமையைப் பெறுகின்றன. மலர்கள் மலர்ந்து புதிய மணத்தைப் பரப்புகின்றன. பறவைகளும், வண்டினங்களும் விழித்தெழுந்து புதியகானம் இசைத்து பறக்கத் தொடங்குகின்றன. கால் நடைகளும், விலங்குகளும் விழிப்படைந்து தங்கள் தங்கள் இனங்களுடன் சேர்ந்து செயல் படத் தொடங்குகின்றன. மனிதனும் விழிப்படைந்துத் தனது பணிகளைச் செய்யத் தொடங்குகின்றான். உலகமே விழிப் படைகிறது. புதிய தெம்பையும் உற்சாகத்தையும் பெறுகிறது. A அதைப் போல பாரத நாடு விடுதலை மார்க்கத்தைக் கண்ட போது புதிய விழிப்புணர்வு ஏற்பட்ட போது உறங்கிக் கிடந்த நமது அறிவு விழிப்படையத் தொடங்கியது. நமது பண்டைய இலக்கியங்களின் நிறைகுறைகளைக் கண்டோம். புதிய இலக்கியங்களும் படைக்க முயன்றோம். பாரதி, தாகூர், வள்ளத்தோள் போன்றவர்கள் புதிய இலக்கியங்கள் படைத்து புதிய பார்வையைக் கொடுத்தார்கள். புதிய உணர்வுகளை ஊட்டி ஊக்க மளித்தார்கள். ஆங்கிலமும், ஐரோப்பிய இலக்கியங்களும் படித்த பலரும் கூட இந்திய இலக்கியங்களைப் படித்து அவை பற்றிப் புதிய பார்வையில் பேசத் தொடங்கினார்கள். குழந்தை பேசத் தொடங்கும் போது அது மழலைச் சொல்லாக இருக்கிறது. நாம் அதைக் கேட்கும் போது அதன் குறைகளைக் காண்பதில்லை. அதன் இனிமையைக் காண்கிறோம், கேட்கிறோம். அதேபோல நமது பல இலக்கிய விமர்சனங்களையும் கேட்டோம், அது நமது வளர்ச்சிக்கும் மேலும் புதிய தெளிவுக்கும் வழி வகுத்துக் கொடுத்தது. நமது நாட்டு மக்கள் அரசியல் துறையில் எழுச்சி பெற்ற போது, சமுதாயச் சிந்தனைத்துறையிலும், இலக்கியச் சிந்தனைத் துறையிலும் எழுச்சி பெற்றோம். இந்தப் புதிய விழிப் புணர்வுக்கு விடுதலைப் போராட்ட காலத்திலேயே வித்திடப் பட்டது. நமது பேரிலக்கியங்களும், கலைச்செல்வங்களும், களஞ்சியங்களும், பக்தர்களின் கைகளிலும், பண்டிதர்களின் கைகளிலும் தங்கியும் தேங்கியும் இருந்த நிலை மாறி புதிய எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெற்றன.