பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் 57 பலவகையான இணைப்பால் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் நாம் கலங்குகிறோம். ஆனால் அந்தக் கலக்கம் தெளிந்து அந்த அறியாமை நீங்குவது வில்லேந்தி இலங்கையில் போரிடவிருக்கும் இராமனைக் காணும் போது ஏற்பட்டு விடுகிறது. அந்த இராமனே எல்லா வேதங்களுக்கும் முடிவான அறிவாகும் என்று தனது அறிவுக்கு அறிவான கொள்கையைக் கம்பன் இராமனிடம் அடக்கிவிடுகிறார். இயற்கை சக்திகளின் இணைப்பே இந்த உலகமும் பேருலகமும் என்னும் உண்மைத் கருத்தைக் கம்பன் வெளியிட்ட போதிலும் அனைத்தும் ஒரு முழு முதல் மூலப் பொருளில் அடக்கம் என்னும் அத்துவைதத் தத்துவத்தை எடுத்துக் கூறுகிறார். கம்பருடைய கடவுள் தத்துவக் கருத்துக்கள் ஆக்கநிலை எண்ண முதல் வாதக் கருத்துக்களுடன் ஒத்ததாக அமைந்துள்ளது. ஆயினும் கடவுட் கொள்கையில் ஒரு குழப்பம் இல்லாமல் சமரசம் காண்பதற்கும் கம்பன் முயன்றுள்ளதும் காணப் படுகிறது. கடைசியாக யுத்த காண்டத்தின் காப்புச் செய்யுளில் கீழ்க் கண்டவாறு கம்பன் எடுத்துக் கூறுகிறார். இதில் கம்பனுடைய சமரசக் கொள்கை வெளிப்படுகிறது. “ஒன்றே யென்னின் ஒன்றேயாம், பலவென் றுரைக்கின் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம், ஆமே யென்னின் ஆமேயாம், இன்றே யென்னின் இன்றேயாம் உளதென்று ரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை, நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா! கம்பனின் இந்தப் பாடல் அவனுடைய மேலும் புதிய வளர்ச்சி நிலையை எடுத்துக் காட்டுகிறது. கடவுள் ஒன்றுதான் என்றால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இல்லை பல கடவுள்கள் இருக்கிறார்களென்றால் அதுவும் சரிதான். அதுவல்ல என்ாறாலும் அது ஆம் என்றாலும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். கடவுள்