பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம் டைய கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 84 H99) வாழி நல்லறம் என்றுற வாழ்த்தினான் ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான்” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மேகநாதன் ஏவிய நான் முகன் படைக்குக் கட்டுண்ட அனுமன் இராவணனுடைய சபைக்கு இழுத்துச் செல்லப் பட்டான். நீ யார் எனக் கேட்டதற்கு அனுமன் அளித்த பதில் இராமனை உயர்த்திப் பேசும் சொற்களாகும். இராமனுடைய பிறப்பை அனுமன் வாயிலாகக் கவிஞன் கூறும் கடவுட் கொள்கை, “மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்திச் சூலமும், திகிரிசங்கும், கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்” என்பது கம்பனது பாடல். அதாவது தொடக்கமும் நடுவும் முடிவும் இல்லாத முக்காலத்தையும் கடந்த முழு முதற் காரணனான திருமால் வில்லும் சூலமும் சங்கும் சக்கரமும் ஏந்தி அயோத்தியில் பிறந்து வந்துள்ளான், அவன், "அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி -i. செலுத்தித் தீயோர் இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான்.”