பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйт –ёРФ «Qрғылшй шлгіsosu— ~~}, costoflsилғайт 85 அறத்தை நிலை நிறுத்தி வேதத்தின் அருள் சுரந்து நீதித்திறம் தெரிந்து உலகை வாழ்விக்க, தீயோரை அழித்துத் தக்கோளின் இடர் துடைத்துப் போக இங்கு பிறந்து வந்துள்ளான். அவனுடைய பொற்பாதம் போற்றுபவர்கள் பிறப்பறுப்பார்கனென்றும் “அன்னவர்க்கு அல்டிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன்’ என்று இராவணனுடைய சபையில் அனுமன் கூறுகிறான். அனுமன் இலங்கையை எரித்து விட்டுச் சென்ற பின்னர் இராவணன் தனது சபையைக் கூட்டி மந்திராலோசனை செய்கிறான். இந்த சபையில் கும்பகர்ணன் இந்திர்சித்தன் முதலிய பலரும் பேசுகிறார்கள். அப்போது வீடணன் “தன்னின் முன்னிய பொருளிலா ஒரு தனித்தலைவன், அன்னமானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான்”என்று இராமன் திருமாலின் அவதாரமாக வந்துள்ளானெனக் குறிப்பிடுகிறான். அதன் பின்னர் இரணியன் கதையைக் கூறுகிறான். “ஓம் நமோ நாராயணா'என்னும் மந்திரத்தை எடுத்துக் கூறுகிறான். * பிரகலாதன் கதையின் ഋ-ഖണ് யார் என்பதை வீடணன் வாயிலாகக் கம்பன் தனது தத்துவ வழிக் கடவுளைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறார். “உலகு தந்தானும் பலவேறு உயிர்கள் தந்தானும் உள்உற்று அலைவு இலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறை கின்றானும் மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் அலகில் பல்பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா !” “மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று மூன்று கண் சுடர்கள் சோதி மூன்று தன் உலகம் மூன்று