9 வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் g)στιο காதையில் மிகச் சிறந்து விளங்கும் பாத்திரங்களுள் வாலியும் ஒருவன். வான்மீகத்தில் ஒரு குரங்காகவே அவன் காட்சியளிக்கிறான். அங்கு நடைபெறும் இராம-வாலி சொற்போரும் இருவர் தரத்தையும் உயர்த்துவதாக இல்லை. ஆனால் கம்பநாடன் படைத்த வாலி ஒப்புயர்வற்றவனாக விளங்குகிறான். கம்பநாடன் காப்பியத்தில் ஈடு இணையற்ற வீரர்களாய், பரம் பொருளே நேரே வந்து தம்மை அழிக்கவேண்டிய சிறப்பும் பெற்று விளங்கும் மாவீரர் மூவராவர். இரணியன், வாலி, இராவணன் என்ற மூவருள் இறுதிவரை விட்டுக் கொடாமல் இறந்தவர் இரணியனும், இராவணனுமாவர். வாலியைப் பொறுத்த மட்டில் ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறான் கவிச் சக்கரவர்த்தி, .. இப்புதிய உத்திக்கு அவன் வாலியின் மூலம் வடிவு கொடுக்க முடிவு செய்தான். அதன் பயனாக வீரம் எது? அறவீரம் எது? எந்த ஒரு செயலையும் அறவீரம் என்று கூற முடியுமா? அல்லது காண்டான் காட்சி அளவில் இவை முடிவு செய்யப்படுகின்றனவா? என்பவை போன்ற அடிப்படை வினாக்களையும் ஆராயும் நிலை ஏற்பட்டு விட்டது. குற்றமற்ற வீரம் என்றால் என்ன? என்ற வினாவும் தோன்றிவிட்டது.
பக்கம்:கம்பன் கலை.pdf/128
Appearance