பக்கம்:கம்பன் கலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 129 அருளினாய் (127 என்று பேசுகிறான். நாய் அடியனேன் ஆவிபோம் வேலைவாய் ஏவுகூர் வாளியால் எய்து அறிவுதந்து அருளினாய்’ என்பதால் தன் உயிர் போதலுக்கும் அம்புக்கும் தொடர்பில்லை என்று உண்மையைக் கூறியதுடன், அந்த அம்பு பேரறிவை விளங்கச் செய்தது என்றும் கூறுகிறான். இராமன் அம்பு வாலியின் உயிர் குடித்ததாகக் கூறுதல் 'காக்கை ஏறப் பனம் பழம் விழுந்தது என்பது போலாகும். இக்கருத்தை வலியுறுத்தவே கவிஞன் எய்து ஆவிபோக்கும் வேலைவாய்' என்று கூறாமல் ஆவிபோம் வேலைவாய்' என்று தன்வினையாகக் கூறுகிறான். கண்ணில் நோய் உடையவன் பொருள்களைக் காண முடிந்தாலும் செம்மையாகக் காண முடிவதில்லை. பொருளின் இயல்பையும் நிறத்தையும் உள்ளவாறு அறிய முடிவதில்லை. காரணம், அவனுடைய பார்வைக் கோளாறேயாம். ஆனால் அதே மனிதன் நோய் நீங்கப் பெற்றவுடன் முன்னர்க் கண்ட அதே பொருள்களைக் கண்டாலும் இப்புதிய பார்வையில் அவற்றின் நிறம், வடிவம் முதலியன மாறி இருக்கக் காண்கிறான். அறிவுடையவனாக இருப்பின் பொருள்கள் என்றும் உள்ளபடியேதான் உள்ளன என்பதையும் தன்பார்வைக் கோளாறு காரணமாக அவற்றின் வடிவையும், நிறத்தையும் பிறழ உணர்ந்த நிலைமையையும் அறிந்து கொள்கிறான். அதேபோல, தசரதகுமாரன் மறைந்திருந்து அம்பு எய்தல், தன் எதிரில் தன்மாட்டுப் பகை கொண்டு சுக்ரீவன் போரிடுதல், இராமனுக்கும் தனக்கும் பகை இன்மை, இருப்பினும் இராமன் தன் மார்பில் அம்பு எய்தல் முதலிய செயல்கள் விளக்கம் பெறாத வாலிக்கு ஒருவிதமாகக் காட்சியளித்தன. ஆனால் விளக்கம் பெற்ற பிறகு, பகை, நட்பு, அம்பு எய்தல், மறைந்து நிற்றல், அறம் பிறழ்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/140&oldid=770652" இலிருந்து மீள்விக்கப்பட்டது