பக்கம்:கம்பன் கலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கம்பன் கலை பெரியனவாக இருந்த அகங்காரம் மமகாரம், சாவு-வாழ்வு, பகை, நட்பு என்பவை பொருளற்ற சிறியனவாக ஆகிவிடுகின்றன. இப்பொழுது முழு விளக்கம் பெற்று விட்டமையாலும், தன் சிற்றறிவினால் ஆராய்ந்து இராமன் 'வில் அறம் துறந்துவிட்டான் என்று கூறியது தவறு என்று உணர்ந்துவிட்டமையாலும், தீயன பொறுத்தி என்று கூறி விட்டதாலும் அவனுடைய விளக்கம் பெற்ற மன நிலையைக் கவிஞன் சிறியன சிந்தியாதான் என்ற இரண்டு சொற்களால் விளக்கி விட்டான். இத்தகைய அறிவு விளக்கம் பெறும் நல்லூழ் உடையவர்கள் விளக்கம் பெறும் வழிகளை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும். ஒரு சிலருக்குக் குருவின் மூலமாக விளக்கம் வரலாம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு விளக்கம் பெறுகிறவர்களும் உண்டு. 'சும்மா இரு, சொல் அற' என்ற சொற்களே அருணகிரியாருக்கு விளக்கம் தந்தன. ஓர் வார்தையுட் படுத்தாய் என்று மணி வாசகர் கூறுவது அவர் திருப்பெருந்துறையில் விளக்கம் பெற்ற முறையை வெளிப்படுத்துகிறது. இதன் எதிராக நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, திருவடி தீட்சை என்ற முறைகளும் உண்டு. ஆனால் வாலி பெற்ற தீட்சை தனித்தன்மை வாய்ந்தது. அம்பின் மூலம் தீட்சை பெற்றதாகப் பிற வரலாறு எங்கும் இல்லை. ஆம்! வாலி போன்ற வீரரும் எங்கும் இல்லையன்றோ? - இராமனுடைய அம்பு தன் உயிரைக் குடிக்கும் என்று முதலிற் கூறிய அதே வாலி, இப்பொழுது தன் கருத்தை மாற்றிக்கொண்டு பேசுகிறான். என்னுடைய உயிர் போகும் இந்த நேரத்தில் நின் கூர்மையான அம்பு ஒன்றால் அடியேனுடைய அறிவு விளக்கம் பெறும் வழியைச் செய்தாய்' என்ற கருத்தில், ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவிபோம் வேலைவாய், அறிவு தந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/139&oldid=770650" இலிருந்து மீள்விக்கப்பட்டது