பக்கம்:கம்பன் கலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 9 127 நீஎன நின்ற நம்பீ! நெறியினில் நோக்கும் நேர்மை நாய்என நின்ற எம்பால் நவை அற உணரலாமே? தீயன பொறுத்தி ! - என்றான்-சிறியன சிந்தியாதான் ! (125) தாய் குழந்தைக்குத் தரும் மருந்து கசப்புடையதாய் இருக்கலாம்; குழந்தையின் கையையும் காலையும் இறுகப் பிடித்துக் கொண்டு தாய் மருந்தைப் புகட்டலாம். செயலளவில் இவை கொடுமை என்பதால் தாய் அன்பிலள் எனக் கூற முடியுமா? அதேபோலச் செயலளவில் இராமன் செயல்கள் உலகத்தாரால் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. இதில் ஐயமே இல்லை. நாம் ஒழுங்கு, நேர்மை என்று கருதிப் போற்றும் கொள்கைகள் வேறு. ஆனால் பேரறிவும் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அர்ச்சுனனுக்குக் கண்ணன் செய்த உபதேசமும் இதுதான். ஆனால், அவை தாயின் கொடுமை போன்றவை என்பதைப் பிறர் அறியமுடியா விடினும் வாலி உணர்ந்து விட்டானாகலின், தாய் என உயிர்க்கு நல்கி என்று கூறுகிறான். மேலும், நெறியினில் நோக்கும் நேர்மை என்றமையின் நீண்ட பார்வையால் அறியப்பட வேண்டியதைக் கிட்டப் பார்வையுடையார் அறியமுடியாது என்றுங் கூறுகிறான். பேரறிவுடையாரும் அகமன விழிப்புடையாரும் மட்டுமே காணக்கூடிய ஒன்றை நாய் என நின்ற எம்பால் நவையற உணரலாமே என்று கேட்டு, அது இயலாத காரியம் என்பதை உணரலாமே என்பதில் வரும் வினா ஏகாரத்தால் பெற வைத்துவிட்டான் வாலி. இத்தகைய அறிவு விளக்கம் பெற்றபொழுது அதுவரை மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/138&oldid=770649" இலிருந்து மீள்விக்கப்பட்டது