பக்கம்:கம்பன் கலை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ல் கம்பன் கலை கூறுகிறான். வீடணன், தற்பொழுது வருவதற்குரிய காரணங்களாக அனுமன் கூறியவை வருமாறு: இதுவரை இராவணன் பிடியிலிருந்த வீடணன், அவனை விட்டு நீங்கினால் சேரக்கூடிய இடம் யாதுமில்லை. இராவணனை வென்றவன் வாலி ஒருவனே ஆயினும் வாலி இடம் இவன் சென்று சேர்தற்கில்லை. எனவே, 'வாலி விண்பெற அர(சு) இளைய வன்பெறக் கோலிய வரிசிலை வலியுங் கொற்றமும் சீலமும் உணர்ந்துநிற் சேர்ந்து தெள்ளிதின் மேலர(சு) எய்துவான் விரும்பி மேயினான்' (வீடணன் அடைக்கலப் படலம், 92) என்று அவன் கூறுவது மிகவும் அழகான வாதமாகும். 'வாலியை வென்றவன் நீ என்பதால் இவ்வீடணன் நின்பால் வந்தான். மேலும், வாலியை வென்ற நீ அவ்வரசை உனதாக்கிக் கொள்ளாமல், அவன் தம்பிக்கே தந்தனை என்பதும் இவனை நின்பால் வரச் செய்தது. அவ்வாதத்தைத் தொடர்ந்த அனுமன் அரக்கர் அழிவு உறுதி என அறிந்த வீடணன், அவ்வரசைத் தனதாக்கிக் கொள்ள முனைந்துவிட்டான். உனக்குரிமையான எறிகடல் உலகெலாம் இளவற்கு ஈந்ததோர் பிரிவருங் கருணையைக் கண்டு இவன் வந்துள்ளான் என்றும் கூறி முடித்தான். இவ்வனுமனுடைய வாதத்தில் சுக்கிரீவன் முதலியோர் கேட்ட கேள்விகளில் ஒன்று தவிர, ஏனையவற்றிற்கு விடை ஒன்றுமில்லை. வீடணன் வந்த காலம் சரியானதன்று என்ற அவர்களுடைய ஐயத்திற்கு அனுமன் இக்காலமே சரியானது என்ற முறையில் விடை இறுத்துளான். இது தவிர ஏனைய அவனுடைய சொற்கள் அனைத்தும் அவசியமில்லாமல் இருப்பது போல் தோன்றுகின்றன. ஆனால், கம்பநாடனா இங்ங்னம் கவிதை புனைபவன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/153&oldid=770666" இலிருந்து மீள்விக்கப்பட்டது