பக்கம்:கம்பன் கலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 13 மாறிவிடுகிறான். தந்தை இவ்வளவு கீழே போகும்போது அவன் மனத்திலே எவ்வளவு வேதனை ஏற்பட்டிருக்கும்? ஆனால், அந்த வேதனையை வெளிக்காட்டாமல் தந்தை என்ற மரியாதை காரணமாக அவன் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் பொறுமையோடு அதனைக் கேட்க வேண்டுமென்ற மனப்பான்மை உடையவனாகக் காட்சியளிக்கிறான் என்பதை அங்கே எடுத்துக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். தசரதன் பேசிய பேச்சுக்குப் பதில் சொல்லவில்லை பரசுராமன். அவனுடைய பேச்செல்லாம் இராகவ னிடத்தில்தான். ஏன் இவ்வளவு தூரம் பேசும்படியாக அனுமதிக்கிறான் என்று சிந்திப்போமேயானால் ஒர் உண்மை விளங்கும். பல சமயங்களிலே எதிரிலே இருப்பவர்களுடைய பண்பாட்டை நாம் அளவிட வேண்டுமேயானால், அவர்களைப் பேசுமாறு செய்யவேண்டும். அவர்கள் பேசப்பேச அறிவுள்ளவன் அவர்களுடைய பேச்சிலிருந்தே அவர்களை எடை போட்டுவிட முடியும். பரசுராமன் கோபக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். வர பலம் உடையவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இருபத்தொரு தலைமுறை கூடித்திரிய அரசர்களையே கொன்றவன் என்பது எல்லோருக்கும் தெரியும். மலை ஒன்றில் வாழ்ந்து வருகிறான், தவம் இயற்றுகிறான் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவனுடைய அகங்காரம் இவனை அழிப்பதற்குரிய அந்த அளவை எட்டப்போகின்றது இப்பொழுது. அதுவரையில் விடுகிறான் சக்கரவர்த்தித் திருக்குமாரனாகிய இராகவன், இதற்கு முன்னே இவனை வென்றிருப்பானேயானால் காரணமில்லாமல் பரசுராமனை பங்கம் செய்ததாக ஒரு பழி ஏற்பட்டு விடும். ஆகவே இதுவரையிலே வாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/21&oldid=770728" இலிருந்து மீள்விக்கப்பட்டது