பக்கம்:கம்பன் கலை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 & கம்பன் கலை பிராட்டியைப் பார்த்து வந்து இராமனிடம் என்ன கூறினான்? - இலங்கையிலிருந்து மீண்ட அனுமன் இராமனைக் கண்டவுடன் அவனை வணங்காமல் சீதை இருந்த தென் திசையை நோக்கி வணங்கினான். (திருவடி, 2) செய்கை யால் இவ்வாறு செய்து காட்டிய அனுமன் வாய் திறந்து பேசிய சொற்கள் ஒப்புயர்வற்றவை; சொற் செல்வன் அனுமன் என்பதை நிலைநாட்டுபவை: 'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்' - r (திருவடி, 25) 'அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும்' (25) ‘என் பெரும் தெய்வம் ஐயா ! இன்னமும் கேட்டி' (26) 'உன் குலம் உன்னதாக்கி உயர்புகழ்க்கு ஒருத்தி ஆய தன் குலம் தன்னதாக்கி ...வானவர் குலத்தை வாழ்வித்து (28) ...நற்பெருந் தவத்தளாய் நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும் கற்பெனப் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன் (29)

'தவம் செய்த தவமாம் தையல்..... இவ்வாறெல்லாம் மாருதி மூலம் பிராட்டியைப் பற்றிக் கேள்விப்பட்ட இராகவன் அவளை நேரே கண்டபொழுது ஏன் கோபித்துத் தகாத வார்த்தைகளால் அவளை ஏச வேண்டும்? மாருதியின் சொற்களைக் கேட்ட சாதாரண மனிதன்கூடப் பிராட்டியிடம் எல்லையற்ற பக்தி கொள்வானே? அப்படி இருக்க இராகவன் இவ்வாறு இழித்தும் பழித்தும் பேசினதன் நோக்கம் என்ன? மாருதி சொற்களை அவன் நம்பவில்லையா? மனிதத் தன்மையைக் கூட இராகவன் இழந்துவிட்டானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/211&oldid=770730" இலிருந்து மீள்விக்கப்பட்டது