206 ம் கம்பன் கலை அப்பெருமாட்டியிடம் இது இருந்தது என்பதை இதுவரை யாரும் அறியவில்லை. அறிவிற் சிறந்த அனுமன்கூட இதனை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. இத்தகைய குற்ற உணர்வு உடையவர்கள் பண்புடையவர் களாயிருப்பின் இக்குற்றத்துக்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று விரும்புவர். பிறப்பெடுத்தவர் அனைவரும் பாவம் பெரிதும் செய்தவராகலின் அதற்குக் கழுவாயாக இவ்வுடலை வருத்திக் கொள்வது, பட்டினி கிடப்பது போன்ற தண்டனைகளை வழங்கிக் கொள்கிற பழக்கம் என்றுமே இருந்ததுண்டு. தாம் செய்துவிட்ட குற்றத்துக்காகப் பிறரை விட்டுத் தமக்குக் கசையடி தருமாறு செய்துகொள்கிற, குறிப்பிட்ட சமயவாதிகள் இன்றும் உண்டு. இத்தண்டனையை அனுபவித்துவிட்டால் மறுபிறப்பில் துன்பம் அனுபவிக்க வேண்டியதில்லை என்பது இவர்களுடைய நம்பிக்கை பிராட்டியைப் பொறுத்தமட்டில் இக் குற்ற உணர்வு அவளுடைய அகமன ஆழத்தில் இருந்ததை அவளோ பிறரோ அறிய வாய்ப்பில்லை. எனினும், ஒருவன் அவளை ஒரு விநாடி ஆழ்ந்து நோக்கியவுடன் அறிந்துகொண்டான். அறிந்த அப்பெருமகன் அவளுக்குத் தக்க மருத்துவம் செய்தால் ஒழிய அவள் முழு அமைதி பெறமாட்டாள் என்பதையும் நன்கு அறிந்துகொண்டான். ஆழ் உணர்வு (Complexes) எதுவாயினும் அதனை அவ்வளவு விரைவாகத் தீர்த்து வைத்தல் இயலாது. அந்தக் குற்ற ஆழ் உணர்வுக்காரர்கள் மனத்தில் மாற்றம் ஏற்பட்டதாக நினைக்க ஒரே வழிதான் உண்டு. அக்குற்றத்துக்கு ஏற்ற தண்டனையைத் தான் அனுபவித்துவிட்டால் ஓரளவு அமைதி பெறுவர். அதுவும் பிறருக்குத் தெரியாத குற்றம் என்று அவர்கள் நினைத்துவிட்டால் பிறர் அதனை அறிந்து
பக்கம்:கம்பன் கலை.pdf/217
Appearance