பக்கம்:கம்பன் கலை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் 9 211 ஆதி சங்கரர் தம் கொள்கைகளைப் பரப்ப எடுத்துக் கொண்ட வேத, வேதாந்த சூத்திர, உபநிடதங்களை இராமானுசரும் எடுத்துக்கொண்டார். 18 ஆம் நூற்றாண்டு வரை வடநாட்டிலும் காஷ்மீரத்திலும் சைவ சமயத்துக்கு இதே முக்கியத்துவம் தர்ப்பெற்றது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் தோன்றிய மெய்கண்டார் போன்றவர்கள் அறிவுவாத அடிப்படையில் சைவ சமயத்தை முனைந்தனர். அதுவரை சைவ சமயத்தில் அதிகம் இடம் பெற்றிருந்த பக்தி வழி மெல்ல விடை பெறலாயிற்று. - இந்தப் பின்னணியில்தான் 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய கம்பநாடனுடைய இறை யுணர்வைப்பற்றியும் ஆயவேண்டும். சைவம், வைணவம் இரண்டிலும் பக்தி மார்க்கம் மங்கிவந்த நிலையில் கம்பன் தோன்றுகிறான். வடநூற் கடலையும் தென் தமிழ்க் கடலையும் கரை கண்டவனாகிய அவனைப் பொறுத்த மட்டில் காப்பியந்தான் உயிர்நாடியே தவிர, இறை யுணர்வைப்பற்றி விரிவாகப் பேசவேண்டிய தேவை இல்லை. என்றாலும், மூலப் பரம்பொருளே இராமனாகத் தோன்றினார் என்ற முறையில் அவன் காப்பிய நாயகனைப் படைத்துக் கொண்டது ஒரு புதுமை. நாராயண மூர்த்தி பல அவதாரங்கள் எடுத்தார்; அவற்றுள் ஒன்றுதான் இராமாவதாரம் என்ற கருத்து அவனுடைய காலத்தில் நன்கு பரவிவிட்ட ஒன்றாகும். அதை மீறக் கம்ப்னாலும் இயலவில்லை. எனவே, திருவவதாரப் படலத்தில் இராமன் கோசலை வயிற்றில் பிறந்தான் என்று கூற வரும்பொழுது நாராயணனே அவ்வாறு வந்தான் என்று கூறிவிடுகிறான். என்றாலும் அந்தப் படலத்தில் இறுதியில் மூவர்க்கும் மேம்பட்ட பரம்பொருளே இராமனாகத் தோன்றினான் என்று பாடிவிடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/222&oldid=770742" இலிருந்து மீள்விக்கப்பட்டது