பக்கம்:கம்பன் கலை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் 223 'நீ ஆதி பரம்பரமும்; நின்னவே உலகங்கள் ஆயாத சமயமும் நின் அடியவே; அயல்இல்லை விராதன்-53) என்ற பாடலும், மேவாதவர் இல்லை; மேவினரும் இல்லை. . வெளியோடு இருள் இல்லை, மேலும் கீழும் இல்லை; மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை . . . முதல் இடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை என்ற பாடலும் சில உதாரணங்களாம். இனி, உபநிடதம் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தும் தமிழ்க் கவிஞன் கம்பன் ஒருவனேயாம். ‘அளவையான் அளப்பரிது: அறிவின் அப்புறத்து உளவை ஆய் உபநிடதங்கள் ஒதுவ; கிளவி ஆர் பொருள்களால் கிளக்குருதவன் - இரணியன் -623) என்ற பாடல் உள்பட பதினான்கு பாடல்களில் பல உபநிடதக் கருத்துகளைப் பேசுவதைக் காணலாம். "கருமமும், கருமத்தின் பயனும் கண்ணிய தருமுதல் தலைவனும், தானும் தான். (64) பகுதியின் உட்பயன் பயந்தது, அன்னதின் விகுதி மிகுதிகள் எவையும், மேலவர் வகுதியின் வசத்தன; வரவு போக்கது (69) 'காலமும் கருவியும் இடனும் ஆய், கடைப் பாலமை பயனும் ஆய், பயன் துய்ப்பானும் ஆய் சீலமும் அவைதரும் திருவுமாய் உளன்' (74) ‘மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும் r எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான்' (71)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/234&oldid=770755" இலிருந்து மீள்விக்கப்பட்டது