பக்கம்:கம்பன் கலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தம்பியர் மூவர் ஏன்? தசரத குமாரன், உடன்பிறந்த தம்பியர் மூவரைப் பெற்றிருந்ததோடு அமைதியடைந்ததாகத் தெரியவில்லை. அயோத்தியிலிருந்து புறப்பட்டு இலங்கைவரை சென்று மீட்டும் அயோத்தி திரும்புவதற்குள் மேலும் மூன்று தம்பியரை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மிக நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் இருந்த காரணத்தால் தசரதனுக்குப் பிள்ளைகள் வேண்டும் என்ற அவா மிகப் பெரிதாக இருந்திருக்க வேண்டும். எனவே அவனுடைய மூத்த மைந்தன், தந்தையின் விருப்பத்தை நன்கு அறிந்திருந்தமையின் போலும் மேலும் மூன்று சகோதரர்களை ஏற்றுக்கொண்டான். இவ்வாறு செய்வதால், தான் மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை; இறந்த தன் தந்தையும் சாந்தி பெறுவார் என்ற கருத்தை இராமனைப் பேசும்போது கம்பன் கூறுகிறான்: குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் புகல் அரும் கானம் தந்த புதல்வராற் பொலிந்தான் உந்தை. - (வீட அடை. 143) ‘புதல்வரால் பொலிந்தான்' என்ற சொற்களை நோக்கவேண்டும். ஒருவனிடம் எப்பொழுது பொலிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/28&oldid=770762" இலிருந்து மீள்விக்கப்பட்டது