பக்கம்:கம்பன் கலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ) கம்பன் கலை ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்குழ வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் தேனார் பூம் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே (678) என்ற பாடலில். அன்பை வழியாகக் கொள்ளாமல் அதனையே பயண்கக் கொள்கின்றவர்களிடம் சுரக்கின்ற அன்பு முதல் வகையைப் போலச் சிறிதாகத் தோன்றி நாளா வட்டத்தில் வளர்வதில்லை. அதன் எதிராக தோன்றும் பொழுதே முழுவதுமாகத் தோன்றிவிடுகிறது. இத்தகைய அன்புடையவர்களை, அன்பு செய்கின்ற அவர்கள், அவர்கள் செய்யும் அன்பு என்று பிரித்துக் காண முடியாது. அவர்களே அன்பு வடிவினர். அவர்களிடம் தான் என்ற அகங்காரமும், தனது என்ற மமகாரமும், இவற்றின் பயனாக விளைகின்ற இருவினைகளும் (புண்ணிய, பாவம்) இவற்றின் பயனாக விளைகின்ற மூன்று குற்றங்களும் (ஆணவம், கன்மம், மாயை) இருப்பதில்லை. இவர்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அன்பு வடிவாகும். இத்தகைய சாத்திய அன்பு பூண்டவர்கள் என்று கண்ணப்பனுழும் குகனையும் நாம் இலக்கியம் மூலம் அறிகிறோம். - குகன் வேடன்; கல்வி அறிவு சிறிதும் இல்லாதவன்; ஞானிகள், யோகிகள் என்ற எவருடனும் பழகாதவன்; பிறவி நோய் என்ற ஒன்று இருப்பதாகவோ அதனைக் கடக்க வேண்டும் என்பதாகவோ அவன் கனவிலும் நினைக்கவில்லை. இராமனைக் காண வந்துள்ள முனிவர் கூட்டம் அவனைத் தரிசிப்பதன் மூலம், அவனைச் சரண் அடைவதன் மூலம் தம் பிறவியைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற கருத்துடனேயே வந்துள்ளது. இவர்களின் எதிராகக் குகன் ஒரு கலயத்தில் தேனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/32&oldid=770767" இலிருந்து மீள்விக்கப்பட்டது