பக்கம்:கம்பன் கலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மனிதனின் பிரதிநிதி இராமன் உடன்பிறவாத் தம்பியராக ஏற்றுக் கொண்டவர்களுள் நடுவில் நிற்பவன் சுக்கிரீவன். அன்பே வடிவாக இருக்கும் குகனுக்கும் அறிவே வடிவாக இருக்கும் வீடணனுக்கும் இடையில் இருப்பவன் சுக்கிரீவன். இராமனுடைய வன வாழ்க்கை தொடங்கி முடிவதற்குள் இம்மூவரும் ஒருவர் பின் ஒருவராக இராமனை அடைகின்றனர். வந்து சேர்ந்த முறையிலும் சுக்கிரீவன் இடைப்பட்டவனாக இருப்பது எல்லா வகையிலும் பொருத்தம் உடையதாகவே அமைந்துள்ளது. - மனிதன் அறிவு, உணர்ச்சி என்ற இரண்டின் கூட்டுச் சேர்க்கையில் வாழ்பவனாவான். இவை இரண்டும் தம்முள் ஒத்த அளவுடன் இருத்தல் வேண்டுமா, ஓரளவு ஏற்றத்தாழ்வுடன் இருத்தல் வேண்டுமா என்ற வினாவிற்கு விட்ை இறுத்தல் கடினமானது. சில சமயங்களில் அறிவு தலைதுாக்கியும், இன்னுஞ்சில சமயங்களில் உணர்வு தலை தூக்கியும் இருப்பவனே சராசரி மனிதன் எனப்படுவான். அறிவின் விளக்கம் இல்லாமல் உணர்வுமட்டும் உடையவனை நாகரிகமற்றவன் என்றும், உணர்ச்சியே இல்லாமல் அறிவுக்கூர்மை மட்டும் உடையவனை சமுதாய வாழ்க்கைக்கு ஏலாதவன் என்றுங் கூறுகிறோம். "அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/42&oldid=770778" இலிருந்து மீள்விக்கப்பட்டது