பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


பெண் குலத்துக்கே மாசு என விளங்கிய அந்த அரக்கி எப்படி இருந்தாள் ? கோபத்தினாலே புருவங்கள் துடித்தன. கடை வாயிலே பிறை போன்ற கோரப் பற்கள் இரண்டு. குகை போன்ற வாய், வடவைக் கனலை இரு கூறாக்கியது போன்ற கண்கள். தீப்பொறி பறக்க விழித்தாள்.

𝑥𝑥𝑥𝑥

கறை கடை அரக்கி–பெண் குலத்துக்கே ஒரு மாசு ஆகி மிக இழிந்த அந்த அரக்கி ; கடை இறை துடித்த புருவத்தள் – கோபத்தினால் துடிக்கின்ற புருவத்தினள்; எயிறு எனும் – கோரப் பற்கள் எனப்படும்; பிறை கடை பிறக்கிட மடித்த – இரண்டு பிறைகள் கடை வாயிலே விளங்க மடித்த, பிலவாயள் – குகை போன்ற வாய் உடையவள்; வடவை கனல் – வடவாமுக அக்கினி, இரண்டாய் – இரண்டு கூறு ஆகி; நிறை கடல் முளைத்தது என—கரை காணாத கடலில் முளைத்தது என்று சொல்லும்படியாக, நெருப்பு எழ – கண்களில் தீப்பொறி பிறக்க, விழித்தாள் — அவர்களை உறுத்து நோக்கினாள்.

𝑥𝑥𝑥𝑥


டம் கலுழ் தடங்களிறு
        கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கு
        முலையாள் மறுகி வானோர்
இடங்களு நெடும் திசையும்
        ஏழ் உலகும் எங்கும்
அடங்கலும் கடுங்க உரும்
        அஞ்ச கனி ஆர்த்தாள்