பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95



பெரிய யானைகள். மதம் பொழியும் யானைகள். அவற்றின் துதிக்கை ஒன்றை இன்னொரு துதிக்கையுடன் பின்னி மாலையாக அணிந்திருந்தாள்.

வானோர் உலகும், எட்டுத் திசைகளும், பூமி முதலிய ஏழ் உலகங்களும் இவற்றில் உள்ள எல்லா உயிர்களும் கலங்கி நடுங்க இடியும் அஞ்சுமாறு ஆரவாரம் செய்தாள்.

𝑥𝑥𝑥𝑥

கடம் கலுழ் தட களிறு—மத நீர் சொரியும் பெரிய யானைகளை, கையொடு கை தெற்றா – ஒரு துதிக்கையோடு மற்றொரு துதிக்கை பின்னி; வடம் கொள—மாலையாக அணிந்ததினால்; நுடங்கும் முலையாள்—அசையும் தனங் கொண்ட தாடகை, வானோர் இடங்களும் — தேவர் உலகத்திலும்; நெடும் திசையும்—எட்டுத் திசைகளிலும், ஏழ் உலகும்—பூமி முதலாகிய ஏழு உலகங்களிலும்; எங்கும்—மற்றுள்ள எல்லா இடங்களிலும்; அடங்கலும் – உள்ள எல்லா உயிர்களும்; மறுகி நடுங்க – கலங்கி நடுங்கவும்: உரும் அஞ்ச—இடியும் அஞ்சவும்; நணி ஆர்த்தாள்—பெருத்த ஆரவாரம் செய்தாள்.

𝑥𝑥𝑥𝑥


ல்லின் மாரி அனய நிறத்தவள்
சொல்லு மாத்திரையில் கடல் தூர்ப்பதோர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள் அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்

இரவிலே தோன்றும் கருமேகம் போலும் நிறங்கொண்ட அந்த தாடகை என்ன செய்தாள்? ஒரு சொல் சொல்லி முடிக்கும் நேரத்துக்குள்ளே கல்மாரி பெய்தாள். தனது