பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கைகளாலே வாரி வீசினாள். எத்தகைய கல்மாரி? கடலையும் தூர்க்கக் கூடிய கல்மாரி. வில் வீரனாகிய இராமன் என்ன செய்தான்? தனது வில்லினின்றும் அம்பு மாரி பெய்தான் தாடகை பெய்த கல் மாரியைத் தடுத்தான்.

𝑥𝑥𝑥𝑥

அல்லில் மாரி அனைய நிறத்தவள்—இரவு நேரத்திலே தோன்றும் கருமேகம் போலும் நிறங்கொண்ட அந்தத் தாடகை; சொல்லும் மாத்திரையில்—ஒரு சொல் கூறி வாய் மூடுமுன்னே; கடல் தூர்ப்பது ஓர் கல்லின் மாரியை — கடலையும் தூர்த்துவிடக் கூடிய கல் மழையை; கை வகுத்தாள் — தன் கைகளால் வாரி வீசினாள். அது – அந்தக் கல் மழையை, வில்லின் வீரன் – வில் வீரனாகிய இராமன்; மாரியின்—தன் வில்லினின்று விடுத்த கணை மாரியினாலே விலக்கினான் – தடுத்தான்.

𝑥𝑥𝑥𝑥


சொல் ஒக்கும் கடிய வேகச்
        சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
        விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
        அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
        பொருள் எனப் போயது அன்றே

கரிய செம்மலாகிய இராமன். இருள் போலும் கருநிறங்கொண்ட அந்த அரக்கி மீது ஓர் அம்பு விடுத்தான். அது வெகு வேகமாகப் பாய்ந்து சென்று அந்த அரக்கியின்