பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

இவ்வாறு அரக்கர் செய்யவே அந்த மாமிசமும் இரத்தமும் ஓம குண்டத்திலே விழாதபடி முனிவர் இருந்த இடத்துக்கு மேலே அம்புகளாலேயே ஒரு சரக் கூடம்—அம்புக் கூரை—அமைத்தான் இராமன்.


𝑥𝑥𝑥𝑥


தாமரைக் கண்ணனும் – செந்தாமரை போலும் கண்களை உடைய இராமனும்; தூமம் வேல் அரக்கர் தம்—புகை கக்கும் வேலாயுதங் கொண்ட அந்த அரக்கர் பெய்த, நிணமும் சோரியும் மாமிசமும் ரத்தமும், ஓமம் வெம்கனல்—ஓமம் செய்யும் வெந்தீ; இடை உகும்—நடுவே விழும்; என்று உன்னி—என்று கருதி; கோமுனி இருக்கை— ராஜ ரிஷியாகிய விசுவாமித்திர முனிவன் இருக்குமிடத்துக்கு மேலே; சரங்களே கொடு—அம்புகளையே கொண்டு; ஓர் கூடம் ஆக்கினான் – ஒரு கூரை வேய்ந்தான்.


𝑥𝑥𝑥𝑥


திருமகள் நாயகன் தெய்வ வாளி தான்
வெரு வரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அவ்
ஒருவனை அந்தகன் புரத்தில் உய்த்ததே.


இவ்வாறு அக்கிரமம் செய்தவர் தாடகையின் புதல்வர் ஆகிய மாரீசன் சுபாகு ஆகியவர் இருவருமே. அவ்விருவர் மீதும் இரண்டு கணைகளை எய்தான் இராமன். இருகணைகளில் ஒன்று ஆக்னேயாஸ்திரம்; மற்றொன்று மானவாஸ்திரம். ஆக்னேயாஸ்திரம் என் செய்தது? சுபாகுவை யமபுரம் அனுப்பியது. மானவாஸ்திரம் மாரீசனைக் கடலிலே கொண்டு போட்டது. எஞ்சிய அரக்கர்கள் ரகு வீரன் திறம் கண்டு அஞ்சி ஓடினார்கள்.