பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

 கங்கையின் சிறப்பைக் கூறுமாறு கேட்டான் காகுத்தன் முனிவனும் மொழியலுற்றான்.

𝑥𝑥𝑥𝑥

ந்த மா நதிக்கு உற்றுள
      தகைமை யாவும்
எந்தை கூறுக என்று இராகவன்
      வினவுற, அனையான்
மைந்த! நின் திரு மரபுளான்
      அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன் சகரன்
       இம் மேதினி புரந்தான்.

“எங்கள் தந்தை போன்ற முனிவரே! இந்தப் பெருநதியின் சிறப்புக்களை எல்லாம் சொல்லி அருள்வீராக” என்று கேட்டான்; இராமன். உடனே முனிவர் சொல்லத் தொடங்கினார்.

“குழந்தாய் ! சகரன் எனும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் உனது மரபிலே தோன்றியவன்; வீர தீர பராக்கிரமம் மிக்கவன்.

அயோத்தியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.”

𝑥𝑥𝑥𝑥

எந்தை — எம் தந்தை போன்ற முனிவரே ! இந்த மாநதிக்கு — பெருமை மிக்க பெருநதி இதற்கு உற்றுள — அமைந்துள்ள; தகைமை யாவும் — சிறப்புகளை எல்லாம்; கூறுக – சொல் வீராக; என்று இராகவன் வினவுற – என்று இராமன் கேட்க ; அனையான் — தந்தையே போன்ற அந்தக் கோசிக முனிவனும் ; மைந்த – (இராமனை நோக்கி)