பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ஓடை—தெற்றிப்பட்டம்‌ அணிந்த; கார்‌ மிசை வருவாரும்‌ – மேகம்‌ போல விரைந்து செல்லக்கூடிய கரிய ஆண்‌ யானை மீது ஏறி வருவோரும்‌; கரிணியில்‌ வருவாரும்‌ – பெண்‌ யானை மீது ஏறி வருவோரும்‌; பார்‌ மிசை வருவாரும்‌—தரையிலே நடந்து வருவோரும்‌; பண்டியில வருவாரும்‌—வண்டிகளிலே வருகின்றவர்களும்‌.

𝑥𝑥𝑥𝑥

முத்தணி அணி வாரும்‌
        மணியணி முனிவாரும்‌
பத்தியின்‌ அவிர்‌ செம்‌ பொன்‌
        பல்‌ கலன்‌ மகிழ்வாரும்‌
தொத்துறு தொழின்‌ மாலை
        சுரி குழல்‌ அணிவாரும்‌
சித்திர நிரை தோயும்‌
        செந்துகில்‌ புனை வாரும்‌.

முத்துக்களாலான ஆபரணங்களை அணிந்து கொள்வோரும்‌. முன்பு அணிந்த ஆபரணங்கள்‌ மீது வெறுப்புற்றுக்‌ கழற்றி வைப்போரும்‌; பொன்‌ ஆபரணங்கள்‌ பலவற்றை அணிந்து மகிழ்வோரும்‌; சுருண்ட தம்‌ கூந்தலிலே அழகிய வேலைப்பாடுகள்‌ கொண்ட மலர்‌ மாலைகளைச்‌ சூடிக்‌ கொள்வோரும்‌; சித்திர. வேலைகள்‌ சிறப்பாகச்‌ செய்யப்பட்ட செம்பட்டு ஆடைகளை உடுத்துவோரும்‌.

𝑥𝑥𝑥𝑥

முத்து அணி—முத்துக்களால்‌ ஆன்‌ ஆபரணங்களை; அணிவாரும்‌—அணிந்து கொள்பவர்களும்‌; மணி அணி