பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சொல்லத் தக்க — இனிய சொல் பேசுபவரும்; கிடை புரை இதழாகும்— சிவந்த நெட்டி போன்ற இதழ் கொண்டவரும்; கிளர் நகை ஒளியாரும் — அரும்பும் புன்னகை ஒளி வீசும் பெண்டிரும்; தட முலை பெரியாரும்—அடி பரந்த பெருத்த முலை கொண்ட பெரிய பெண்மணிகளும்; தனி இடை சிறியாரும் — ஒப்பற்ற இடை சிறுத்த பெண்களும்; பெடை அன — அன்னப் பேடு போன்ற நடை கொண்ட பெண்களும்; பிடி என வருவாரும்—பெண்யானை போல அசைந்து அசைந்து நடந்து வருவாரும்.

𝑥𝑥𝑥𝑥


ன்றலின் வந்து
        மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந் தகை
        வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும்
        எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும்
        யோகமும் ஒத்தார்.

திருமண மண்டபத்திலே அலங்கரிக்கப் பட்ட மேடை மீது இராமனும் சீதையும் வந்து வீற்றிருந்தார்கள். அது எப்படி இருந்தது? போகமும் யோகமும் போல் இருந்தது.

𝑥𝑥𝑥𝑥

மன்றலின் வந்து— திருமணத்தின் பொருட்டு வந்து; மணித் தவிசு ஏறி—அத் திருமணத்திற்காக அமைக்கப் பட்ட அலங்கார மேடை மீது ஏறி; வென்றி நெடுந்தகை வீரனும்—வெற்றியும் பெருமையும் பொருந்திய வீரனாகிய ராமனும்: ஆர்வத்து இன் துணை அன்னமும் — அந்த ராமன் பால் ஆர்வம் கொண்ட இன்பத் துணையாகிய சீதையும்; எய்தி இருந்தார்—