பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154


சனகனின் மகளாகிய ஊர்மிளையை இலட்சுமணன் திருமணம் செய்து கொண்டான். சனகனின் சகோதரன் ருசத்துவன் எனும் பெயர் கொண்டவன். அவனுடைய பெண்கள் இருவர். அந்த இருவரையும் பரத சத்துருக்கினருக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

ஆக பங்குனி உத்திர நன்னாளிலே, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கினன் ஆகியோர் நால்வருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக் கெல்லாம் ஏராளமான தான தருமங்கள் செய்தான் தசரதன்.

“நான் வந்த வேலை முடிந்தது. செல்கிறேன்” என்று கூறினார் விசுவாமித்திரர். விடை பெற்றார். இமய மலைக்குச் சென்று விட்டார்.

அயோத்திக்குப் புறப்பட்டான் தசரத மன்னன்.

𝑥𝑥𝑥𝑥

ன் மக்களும் மருமக்களும்
        நனிதன் கழல் தழுவ
மன்மக்களும் அயன் மக்களும்
        வயின் மொய்த்திட மிதிலைத்
தொன் மக்கள் தம் மனம் உக்கு
        உயிர் பிரிவென்பதோர் துயரின்
வன்மக் கடல் புக உய்ப்பதோர்
        வழி புக்கனன் உரவோன்

அயோத்திக்குப் புறப்பட்டான் தசரதன். சக்கரவர்த்தியின் திருக்குமாரர் நால்வரும் அவர்தம் மனைவிமாரும் அவனை