பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

பூதங்களும்) அழியும்-அழிதற்குரிய; ஊழி – ஊழிக்கால முடிவில்; திரி – சுழன்று நடம்புரிகின்ற; உமை கேள்வனை ஒப்ப – உமையாள் பங்கினனாகிய உருத்திரன் போன்ற தோற்றமும்.

xxxx


யிர் துற்றிய கடல் மாநிலம்
      அடையத் தனி படரும்
செயிர் சுற்றிய படையான்
      அடல் மற மன்னவர் திலகன்
உயிர் உற்றது ஓர் மரமாம் என
      ஓராயிரம் உயர் தோள்
வயிரப் பணை துணியத் தொடு
      வடிவாய் மழு உடையான்

கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் சந்திர வமிசத்திலே தோன்றியவன்; ஆயிரம் கைகள் கொண்டவன்; போர் வல்லான்; பெரும் படையுடையவன்; அரசர்க்கு எல்லாம் திலகம் போன்றவன். தன் புயவலியால் இராவணனையே கட்டிச் சிறை செய்தவன். அத்தகைய கார்த்த வீரியார்ச்சுனனோடு போர் செய்து தன்னுடைய கோடாலியினாலே அவனுடைய கைகள் ஆயிரமும் வெட்டி வீழ்த்தி உயிருடன் கூடிய மரம் போல நிற்கச் செய்தவன் பரசுராமன். அத்தகைய சிறந்த கோடாலியை ஆயுதமாகக் கொண்டவன்.

xxxx

அயிர் துற்றிய—நுண்ணிய மணல் நிறைந்த; கடல் மாநிலம் அடைய—கடலால் சூழப்பட்ட இந்தப் பரந்த உலகம் முழுவதும்; தனிபடரும் — தனக்கு ஒப்பின்றி பரந்து செல்லத்