பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

நெருங்குதற்கு அரியனாய் இரு. தேவர் போல உன்னை மக்கள் வணங்கும்படி நட, நல்லன செய்.

வாய்மை சால் அறிவின்
       வாய்த்த மந்திரி மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த
       திறத் தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணித்
       துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மை யோடு அணிமை இன்றித்
       தேவரின் தெரிய நெற்றி

மறபடியும் கோசல நாட்டுக்கு வருவோம். கோசல தேசத்திலே நல்லரசு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்றது. அதனாலே அந்த நாட்டிலே சிறந்த பொருளாதாரம் வேர் கொண்டது. எப்படி? கம்பர் வாயால் கேட்போம்.

கழனிகளின் வரம்பு எங்கும் முத்துக்கள். நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள். வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்

வரம் பெலாம் முத்தம்; தத்தும்
      மடைஎலாம் பணிலன்; மா நீர்க்
குரம் பெலாம் செம்பொன்

பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம். இப்படியாக எங்கும் செல்வம்! சங்குகள் நீரிலே இனிது கிடக்கும். எருமைகள் மர நிழலிலே படுத்து உறங்கும். ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கின்ற மலர் மாலைகளிலே வண்டுகள் துயில் கொள்ளும். அங்குள்ள நீர்