பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போக்கினார்கள் இரண்டு கட்சிக்காரர்கள். ஒவ்வொருவரும் ஒரு கோழி கொண்டு வருவார்கள். கட்சிக்கு ஒரு கோழி ஆக இரண்டு கட்சிக்கும் இரண்டு கோழிகள். இந்தக் கோழிகளின் கால்களிலே கத்தி கட்டியிருப்பார்கள், கூர்மையான கத்தி. இந்த இரண்டு கோழிகளையும் சண்டைக்கு விடுவார்கள். சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.

அது பற்றிக் கம்பர் சொல்கிறார் கேளுங்கள்.

வீரவாழ்வே விரும்பும் கோழிகள். அவ்வீர வாழ்வுக்கு ஊறு நேர்ந்தால் கணமும் உயிர்தரியாத கோழிகள். சினத்தால் சிவந்த கண்கள் அவற்றைவிடச் சிவப்பான உச்சிக் கொண்டை


கறுப்புறு மனமும் கண்ணில்
சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி
உறுபகை இன்றிச் சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர்
மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட ஆவிபேணா வாரணம்
பொருத்து வாரும்

இந்த மாதிரி கோழிச் சண்டையில் பொழுது போக்கினார்கள்.

கோசல நாட்டின் இயற்கை வளம் பற்றிச் சொன்னார். அந்நாட்டு மக்களின் பொருள் வளம் பற்றிச் சொன்னார். அவர்களுடைய கல்வி பற்றிச் சொன்னார். பின் அவர்களுடைய பிள்ளைகளின் விளையாடல் பற்றிச் சொன்னார். அந்நாட்டு மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொன்னார்.