பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52



இவ்வாறு அந்த ஆற்று நீர் பாய்வதனாலே கோசல நாடு செழித்து விளங்கிற்று.

எங்கு நோக்கினும் நீர் நிலைகள், அவற்றிலே சங்குகள் கிடக்கும், எருமைகள் மர நிழலிலே படுத்து உறங்கும், ஆடவரும் மகளிரும் சூடியுள்ள மலர் மாலைகளிலே வண்டுகள் மொய்த்து உறங்கும்.

ஆமை இருக்கிறதே! அது சேற்றிலே கிடக்கும் நீர்த்துறைகளிலே சிப்பிகள் இருக்கும், வைக்கோல் போர்களிலே அன்னம் படுத்து உறங்கும். தோப்புகளிலே மயில்கள் இருக்கும்.

தாமரை மலரிலே திருமகள் இருப்பாள்.

சங்கம் – சங்குகள்; தீரிடை உறங்கும். நீரிலே கிடக்கும் ; மேதி – எருமைகள்; நிழலிடை உறங்கும் – மர நிழலிலே படுத்து உறங்கும், வண்டு —வண்டுகள்; தாரிடை உறங்கும் — ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கும் மலர் மாலைகளிலே படுத்துறங்கும், செய்யாள் – திருமகள்; தாமரை உறங்கும் —தாமரை மலரிலே வீற்றிருப்பாள்; ஆமை — ஆமைகள்; தூரிடை உறங்கும் — சேற்றிலே உறங்கும்; துறையிடை – நீர்த்துறைகளிலே; உறங்கும் இப்பி — முத்துச்சிப்பிகள் கிடக்கும்; போரிடை – வைக்கோல் போர்களிலே அன்னம் உறங்கும் — அன்னப் பறவைகள் படுத்து உறங்கும். தோகை — மயில்கள்; பொழில் இடை – தோப்புகளிலே உறங்கும்—இருக்கும்.