பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

ஞானம் நிரம்பியவர்; பிரமதேவனுக்கு ஒப்பானவர்; ஆண் பெண் என்ற இந்த உலக வேறுபாடுகளை ஒரு சிறிதும் அறியாதவர்; முகத்திலே மான் கொம்பு உடையவர்; தவத்தில் சிறந்தவர். அவர் இங்கே வரல் வேண்டும்.

𝑥𝑥𝑥𝑥

வருகலை அறிவு—பலவாக உள்ள கலை அறிவிலும்; நீதி மனு நெறி வரம்பு—நீதிகளை விளக்கும் மனு தர்ம விதிகளிலும்; வாய்மை தரு—உண்மைப்பொருள்களை எடுத்துக்கூறும்; கலை மறையும்—பல பிரிவுகள் கொண்ட வேதங்களிலும்; எண்ணில்—ஆராய்ந்து பார்க்குங்கால்; சதுமுதற்கு—நான்முகனாகிய பிரமதேவனுக்கு; உவமை சான்றோன்—ஒப்பானவரும்; திருகலை உடைய—ஆண் பெண் என்ற வேறுபாடு கொண்ட; இந்தச் செகத்துனோர்—இந்த உலக மக்களின் இயல்புகளை; தேரா—சிறிதும் அறியாதவரும்; ஒரு கலை சிருங்கமுகம்—ஒற்றை மான் கொம்பு பொருந்திய முகம் உடையவரும் ஆன; உயர் தவன்—மேலான தவ முனிவர்; வரல் வேண்டும்—இங்கே வரல் வேண்டும்.

𝑥𝑥𝑥𝑥


பா
ந்தளின் மகுட கோடி
      பரித்த பார் இதனில் வைகும்
மாந்தரை விலங் கென்று உன்று
      மனத்தன் ; மாதவத்தன் ; எண்ணில்
பூந்தவிசு உகந்துளோறுப்
      புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின்
      தனையர்கள் உளராம். என்றான்.