பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


கரனும் பிறரும் மாய்ந்ததை மறந்தான்; தங்கையின் மூக்கை அறுத்தவன் திறனையும் மறந்தான்; அதனால் விளைந்துள்ள அவமானத்தையும் மறந்தான்; சிவனையும் வெற்றி கண்ட காமனின் அம்பினால் தாக்கப்பட்டுத் தான்பெற்ற வரனையும் மறந்தான்.

கேட்ட மங்கையை மறந்திலாதான்– இவ்வாறு சூர்ப்பணகை கூறக் கேட்ட சீதை எனும் மங்கையை மறந்திலாத இராவணன்; கரனையும் மறந்தான்– தம்பியாகிய கரன் மாண்டதையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்தும் நின்றான் உரனையும் மறந்தான்– தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த பின்னரும் நிற்கும் வீரனின் வலிமையையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்– அதனால் தனக்கு நேர்ந்த இழிவையும் மறந்தான்; அரனையும் கொண்ட– சிவனையும் வெற்றி கண்ட; காமன் அம்பினால்– மன்மதன் கணையினால்; முன்னை வரனையும் மறந்தான்– முன்பு தான் பெற்ற சிறந்த வரத்தையும் மறந்தான்.

“செந்தாமரைக் கண்ணோடும்
        செங்கனி வாயினோடும்
சந்தார் தடந்தோளொடும்
        தாழ் தடக்கைகளோடும்
அம்தார் அகலத்தொடும்
        அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அவ்வல்வில்
        இராமன்” என்றான்.

சூர்ப்பணகையோ இராமனையே எண்ணி எண்ணி இரவு முழுவதும் தூங்கவில்லை. இராவணன் கண்முன் எப்படி