பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35



என்கிற, மான் கொண்டு- மான் போலும் மங்கையைத் தூக்கிக்கொண்டு வந்து ஊடாடு நீ- நீ இன்புறுவாய்; உன் வாள்வலி- உன் ஆயுத வலிமையை, உலகம் காண- உலகத்தினர் கண்டு வியப்புறும் வண்ணம்; யான் கொண்டு ஊடாடும் வண்ணம் நான் கலந்து இன்புறும் விதமாக; என் பால்- என்னிடத்திலே, இராமனைத் தருதி- இராமனைக் கொண்டு வந்துகொடு.

மாரீசன் சுபாகு என இருவர்; சுந்தன் எனும் யக்ஷனுக்கும் தாடகைக்கும் பிறந்தவர்; அகஸ்திய முனிவரால் சபிக்கப்பெற்று அரக்கரானோர்: இராவணனுக்கு மாமன் முறையினர்; மாயம் வல்லவர்.

தாடகையின் மூத்த புதல்வன் மாரீசன். இரண்டாவது புதல்வன் சுபாகு. இம்மூவரும் விசுவாமித்திர முனிவரின் வேள்வியை அழிக்கப் போந்தனர். இராமனது அம்புக்கு ஆற்றாது ஒடிப் பிழைத்தான் மாரீசன். தாடகையும் சுபாகுவும் கொல்லப்பட்டனர்.

“சந்த மலர்த் தண் கற்பக
        நீழில் தலைவர்க்கும்
அந்தகனுக்கும் அஞ்ச
        அடுக்கும் அரசு ஆள்வாய்
இந்த வனத்து என் இன்னல்
        இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் சொல்லுதி”
        என்றான் மருள்கின்றான்.

சூர்ப்பணகை ஊட்டிய காமம் என்ற நஞ்சு தலைக்கு ஏறி நிற்பத் தவிக்கிறான் இராவணன், எவ்வாறேனும் அச்-