பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பெரியோய்! வஞ்சம் விரும்பினார்– வஞ்சகச்செயல் புரிய விரும்பினவர்களான; வெய்ய– கொடிய; வல்– வலிமை பொருந்திய; அரக்கர்– இராட்சதர்கள்; வினையில் செய்த– சூதாகச் செய்த; கைதவம் மான் என்று– மாயமான் இஃது என்று; கடையின்– முடிவில்; காணுதி– காண்பாய்; என்றான்– என்று கூறினான்.


மந்திரத்து இளையோன் சொன்ன
        வாய்மொழி மனத்துக் கொள்ளான்
சந்திரற்கு உவமை சான்ற
        வதனத்தாள் சலத்தை நோக்கிச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
        முறுவலன், சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான் அம்
        மானினைத் தொடரலுற்றான்.

அழகிய தோள்கள் கொண்ட அவ்விராமன் ஆலோசனை மிக்க இளையோனாகிய லட்சுமணன் சொன்ன மொழிகளைக் காதில் ஏற்றான் அல்லன்; பவழ வாயில் புன்னகை பூத்தான்; மானைப் பின் தொடர்ந்து சென்றான்.

சிகர செவ்வி– மலைச் சிகரங்கள் போன்ற; சுந்தரத் தோளினான்– அழகிய தோள்கள் கொண்ட; இராமன் மந்திரத்து இளையோன்– ஆலோசனை மிக்க இளையவனாகிய லட்சுமணன், சொன்ன– எடுத்துக்கூறிய; வாய்மொழி– உண்மையான சொற்களை; மனத்துள்– தன் மனத்தின் உள்ளே; கொள்ளான்– ஏற்றுக்கொள்ளாதவனாய்; சந்திரற்கு – சந்திரனுக்கு; உவமை சான்ற உவமை கூறுவதில் சிறந்து விளங்கிய; வதனத்தாள்– முகம் உடைய