பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

விரைவிலே; பற்றினை– பிடித்து; தருதி ஆயின்– தருவாய் ஆயின்; அவதி எய்தப் பெற்று– நம் வனவாசம் முடியப் பெற்று மதியிடை– நம் அயோத்தி நகரிலே: இனிது உண்டாட– மகிழ்ந்து விளையாட; பெறற்கு அரும் தகைத்து– பெறுதற்குரிய சிறப்புடையதாகும்; என்றாள்– என்று சொன்னாள்.

ஐயா, நுண் மருங்குல் நங்கை
        அஃது உரை செய, ஐயன்
‘செய்வென்’ என்று அமைய நோக்கித்
        தெளிவு உடைச் செம்மல் செப்பும்
‘வெய்ய வல் அரக்கர் வஞ்சம்
        விரும்பினார் வினையின் செய்த
கை தவமான் என்று அண்ணல்
        காணுதி கடையின்’ என்றான்.

இவ்வாறு சீதா பிராட்டி சொல்லவும் ‘அவ்வாறே பற்றித் தருவன்’ என்று இராமன் அம் மானை நோக்கினான். “இம் மான் மாயம் வல்ல அரக்கர் வஞ்சம் தீர்க்கக் கருதி ஏவிய மாயமான். இதனை நீவிர் இறுதியில் காண்பீர்.” என்றான் லட்சுமணன்.

ஐய– உளதோ இலதோ என்று ஐயம் கொள்ளத் தக்க; மருங்குல் நங்கை– இடையுடையவளாகிய சீதை, அஃது உரை செய்ய– அம்மொழி கூறவும்; செய்வன என்று– அவ்வாறே பற்றித் தருவன் என்று; ஐயன்– இராமன்; அமைய நோக்க– அம் மானைக் கூர்ந்து நோக்க; தெளிவுடை தம்பி– தெளிந்த மதி கொண்ட தம்பியாகிய லட்சுமணன்; செப்பும்– பின் வருமாறு சொல்லத் தொடங்கினான். அண்ணல்–

5