பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஆகின்றது – நம்மிடம் வலியே வந்து பொருந்தியுள்ளது; அரசன் தன் ஆணை – இராமனது கட்டளையை; மறுத்து – மீறி; ஏகு என்றீர் – நீவிர் என்னைப் போகச் சொல்கின்றீர்; தமியிர் இருக்கின்றீர் – நீவிர் தனியாக இருக்கின்றீர்; என்று – எனக் கூறி; பின் – பிறகு; வேகின்ற சிந்தையான் – துயரால் மனம் வெந்து கொண்டிருக்கும் இலட்சுமணன்; விடைகொண்டு – சீதையிடம் விடை பெற்றுக்கொண்டு; ஏகினான் – சென்றான்.

“இருப்பனேல், எரியிடை
        இறப்ப ரால் இவர்;
பொருப்பு அனையானிடைப்
        போவெனே எனின்
அருப்பம் இல் கேடு வந்து
        அடையும்; ஆருயிர்
விருப்பனேற்கு என் செயல்”
        என்று விம்மினான்.

“நான் போகாது இங்கு நின்றால் இவர் தீயில் வீழ்ந்து இறப்பர். போனாலோ? பெரும் கேடு வரும். இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவிக்கிறேன். உயிர் விடாது உழல்கின்றேன் என் செய்வேன்?” என்று விம்மினான் லட்சுமணன்.

இருப்பனேல் – நான் போகாது இங்கே இருப்பேன் ஆகில்; இவர் எரியிடை இறப்பர்; இந்தப் பிராட்டி தீயில் வீழ்ந்து உயிர் விடுவர்; பொருப்பு அனையான் குடை – குன்றனைய இராமனிடையே செல்வேன் ஆகில்; அருப்பம் இல் – அற்பமானது என்று தள்ளிவிட முடியாத; கேடு – பெருங்கேடு; வந்து அடையும் – வந்து சேரும், ஆருயிர் விருப்பனேற்கு –