பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



90

செய்கின்ற தும்பியின் இனம் என – வண்டுகள் கூட்டம்போல; களித்துளது என்பது என்? – மகிழ்ந்து மயங்கின என்று சொல்வதில் என்ன சிறப்பு? (பின் என்னை) அவன் மனம் எனக் களித்தது – அவன் மனமேபோல் கண்களும் களித்தன.

சேயிதழ்த் தாமரைச்
        சேக்கை தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற
        மேனி காணுதற்கு
ஏயுமே இருபது இங்கு
        இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று
        அல்லல் எய்தினான்.

தாமரை மலரிலே வீற்றிருக்கின்ற திருமகள்; தனது இருக்கை விட்டு இவ்விடம் வந்துவிட்டாள். அவளது அழகிய மேனி காண்பதற்கு எனது கண்கள் இருபது போதுமோ? போதா – “ஆயிரம் கண்கள் – இமையாத கண்கள் – பெற்றிலனே” என்று வருந்தினான். – வருந்தியவன் யார்? இராவணன்.

சேய் இதழ் தாமரைச் சேக்கை – சிவந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய தனது இருப்பிடம்; தீர்ந்து – விட்டு; இவண் – இவ்விடம்; மேயவள் – வந்துள்ள திருமகளாகிய இவள்; மணி நிறமேனி – சிறந்த ஒளியுடைய திருமேனியை; காணுதற்கு – காண்பதற்கு; இங்கு இருபது நாட்டங்கள் – எனக்குள்ள இந்த இருபது கண்கள்; ஏயுமே – போதுமோ; (போதா) இமைப்பு இல் நாட்டங்கள் –