பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



89

வேலையன் – ஆசை எனும் கடலிடைப்பட்டவனுமாகிய இராவணன்; பொற்பினுக்கு அணியினை – அழகுக்கு ஓர் அணிகலன் போன்றவளை; புகழின் சேக்கையை புகழுக்கு இருப்பிடமானவளை; கற்பினுக்கு அரசியை – கற்பு என்பதற்கு ஓர் அரசி போன்றவளை கண்ணில் நோக்கினான் – தன் கண்களால் நேரில் கண்டான்.

புன மயிர் சாயலின்
        எழிலில் பூதறைச்
சுனை மடுத்து உண்டு
        இசை முரலும் தும்பியின்
இனம் எனக் களித்துளது
        என்பது என்? அவன்
மனம் எனக்களித்தது
        கண்ணின் மாலையே.

இராவணனுக்குத் தலைகள் பத்து; கண்கள் இருபது; இந்த இருபது கண்களும் என்ன செய்தன? களித்தன. எதை போல? – மலர்களிலே உள்ள தேன் ஒரு மடுவிலே தேங்கியுள்ளது. தேங்கிய மதுவை உண்டு களித்து மயங்கி ரீங்காரம் செய்கின்றன வண்டுகள். அம் மாதிரி ஏன்? அவன் மனம் போல கண்களும் களித்தன என்பதே பொருந்தும்.

கண்ணின் மாலையே – சீதையைக் கண்ட அந்த இராவணனுடைய கண் வரிசைகள்; புனமயில் சாயல் தன் எழிலில் – காட்டிலே சுயேச்சையாய் திரிகின்ற மயில் போலும் மேனியளாகிய சீதையின் அழகினால்; பூ நறை சுனை மடுத்து – பூக்களில் உள்ள தேன் நிறைந்த மடுவில் அதனைத் தேக்கிப் பருகி; இசை முரலும் – ரீங்காரம்