பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


இந்திரற்கு– இந்திரனுக்கு; இந்திரன்– அரசன்; எழுதல் ஆகலா– எவராலும் எழுத முடியாத; சுந்தரன்– அழகன்; நான்முகன்– பிரமனுடைய; மரபில்–வமிசத்தில்; தோன்றினான்– வந்தவன்; அந்தரத்தோடும்– வானுலகத்தோடும்; எவ்வுலகும்– எல்லா உலகங்களும்; ஆள்கின்றான்– ஆள்கின்றவன்; மந்திரத்து– மந்திரங்கள் கொண்ட; அருமறை– அரிய வேதங்களை; வைகும் நாவினான்– ஓதும் நாவினையுடையவன்.

“ஈசன் ஆண்டு இருந்த பேர்
        இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து
        எடுக்கும் ஊற்றத்தான்
ஆசைகள் சுமந்த பேர்
        ஆற்றல் ஆனைகள்
பூசல் செய் மருப்பினைப்
        பொடி செய் தோளினான்.”

“ஈசன் வசிக்கிறானே, அந்த கயிலங்கிரியை வேரோடு பிடுங்கிய ஆற்றல் உடையவன். அது மட்டுமா? வலிமை மிக்க யானைகளின் தந்தங்களை ஒரே நொடியில் பொடி செய்யக்கூடிய பேராற்றல் உள்ளவன்!” என்று பொடி வைத்து பேசினான் இராவணன்.

ஈசன்– சிவபெருமான்; ஆண்டு இருந்த– இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளும்; இலங்கு மால் வரை– சிறந்து விளங்கும் பெரிய கயிலாய கிரியை; ஊசி வேரொடும்– சிறு வேர் விடாமல்; பறித்து– பிடுங்கி; எடுக்கும்– எடுக்கின்ற; ஊற்றத்தான்– வலிமையுடையவன்; ஆசைகள் சுமந்த–

7