பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


(இராமன்‌ வனம்‌ சென்றது)

குருக்களை இகழ்தலின்‌ அன்று– பெரியோர்களைப்‌ பழித்த குற்றத்தினால்‌ அன்று; குன்றிய செருக்கினால்‌ அன்று– கர்வத்தின்‌ உயர்வால்‌ அன்று; ஒரு தெய்வத்‌தாலும்‌ அன்று– ஒரு தெய்வம்‌ சீறியதாலும்‌ அன்று; அருக்கனே அனைய அரசர்‌ கோமகன்‌– சூரியனே போன்ற தசரத சக்கரவர்த்தி; இருக்கவே– உயிருடன்‌ இருக்கவே; அவன்‌ வனத்து ஏகினான்‌– அவன்‌ காட்டுக்குப்‌ போனான்‌” என்றாள்‌.


“குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையேல்‌
        கொதித்து வேறுளோர்‌
செற்றதும்‌ இல்லையேல்‌
        தெய்வத்தால்‌ அன்றேல்‌
பெற்றவன்‌ இருக்கவே
        பிள்ளை கான்‌ புக
உற்றது என்‌? பின்‌ அவன்‌
        உலந்தது என்‌?” என்றான்‌.

“குற்றம்‌ ஏதும்‌ இல்லை என்றால்‌; கோபித்தவர்‌ எவரும்‌ இல்லை என்‌றால்‌; தெய்வம்‌ சீறவில்லை என்றால்‌ பெற்றவன்‌ இருக்கும்‌ போதே பிள்ளை கான்‌ சென்றது ஏன்‌? அவன்‌ சென்ற பின்‌ தந்‌தை வான்‌ சென்றது ஏன்‌?” என்றான்‌ பரதன்‌.

குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையேல்‌– இராமன்‌ செய்த குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையாகில்‌; கொதித்து வேறுளோர்‌ செற்றதும்‌ இல்லையேல்‌– மாற்றார்‌ கொதித்துப்‌ போர்‌ செய்து விரட்டியதும்‌ இல்லையேல்‌; தெய்வத்தால்‌