பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


1. ஐராவதம் 2. புண்டரீகம் 3. வாமனம் 4. குமுதம் 5. அஞ்சனம் 6. புஷ்பதந்தம் 7. சார்வபெளமம் 8. சுப்பிரதீகம்.

உரன் நெரிந்து விழ என்னை
        உதைத்து உருட்டி மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க
        நான் இருந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ?
        இவை படவும் கடவேனோ?
அரன் இருந்த மலை எடுத்த
        அண்ணாவோ! அண்ணாவோ!

“சிவன் இருந்த கயிலாய மலையைப் பெயர்த்த என் அண்ணா!

என்னை உதைத்து உருட்டி என் மூக்கை அறுத்தமானிடன் பெருமிதங்கொண்டு தன் தோள் கண்ட வண்ணம் இன்னும் இருக்கிறானே! நான் புலம்புகிறேனே! கரன் பாதுகாப்பில் இருக்கும் வனம் இதுவன்றோ! எனக்கு இந்த கதி நேரலாமோ?”

இவ்விதம் புலம்பிவிட்டு கரதூஷணர்களிடம் சென்று முறையிட்டாள் சூர்ப்பணகை அவர்களும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு இராம லட்சுமணர்களுடன் போர் செய்ய வந்தார்கள். அவர்களும் அவர்களுடன் வந்த படைகளும் பொடிப் பொடியாகச் சிதறி அழியும்படி போர் செய்தனர் இராம லட்சுமணர்.

அரன் இருந்த–சிவபெருமான் எழுந்தருளிய; மலை எடுத்த– கயிலாய கிரியைப் பெயர்த்த; ஓ அண்ணா! உரன்